ரூ.8.40 கோடி மதிப்பில் புதிய திட்டப்பணிகளுக்கு இன்று அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கி வைத்தார் அமைச்சர் சேகர்பாபு!

5 hours ago 3

இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், அண்ணாநகர் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.8.40 கோடி மதிப்பில் புதிய திட்டப்பணிகளுக்கு இன்று அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கி வைத்தார். இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று (15.05.2025) வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் அண்ணாநகர் மண்டலம், வார்டு-95, வில்லிவாக்கம், புதிய ஆவடி சாலை, திருநகர், 20வது தெருவில் உள்ள திருநகர் பூங்காவில் ரூ.90 இலட்சம் மதிப்பில் 1,679 சதுர அடி பரப்பளவில் தரைத்தளத்தில் மகளிர் உடற்பயிற்சிக் கூடம் மற்றும் முதல் தளத்தில் யோகா மையக் கட்டடம், கிழக்கு மாடவீதியில் ரூ.1.50 கோடி மதிப்பில் 2,335 சதுர அடி பரப்பளவில் புதிதாக அமைக்கப்பட உள்ள போதைக்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு மையம் மற்றும் வார்டு-99 கங்காதீஸ்வரர் கோவில் தெரு, சென்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பி. பிளாக் கட்டடத்தை முழுவதும் இடித்துவிட்டு, ரூ.6 கோடி மதிப்பில் தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன் கூடிய புதிய பள்ளிக் கட்டடம் ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கி வைத்தார்.

கங்காதீஸ்வரர் கோவில் தெரு, சென்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் பள்ளி கட்டடம் கட்டும் பணியுடன், ஏ. மற்றும் சி பிளாக் கட்டடங்களைப் புனரமைத்தல், பள்ளியைச் சுற்றிலும் சுற்றுச் சுவர் அமைத்தல், நுழைவுவாயில், கலையரங்கம், உணவுக் கூடம், பள்ளி வளாகம் முழுவதும் மழைநீர் சேகரிப்பு அமைப்பு மற்றும் வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட வசதிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இந்நிகழ்ச்சிகளில், மேயர் திருமதி ஆர்.பிரியா, வில்லிவாக்கம் சட்டமன்ற உறுப்பினர் அ.வெற்றி அழகன், துணை ஆணையர் (பணிகள்) வி.சிவகிருஷ்ணமூர்த்தி, இ.ஆ.ப., மண்டலக் குழுத் தலைவர் கூ.பி. ஜெயின், நியமனக் குழு உறுப்பினர் சொ. வேலு, மாமன்ற உறுப்பினர்கள் திருமதி சுதா தீனதயாளன், பரிதி இளம்சுருதி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

The post ரூ.8.40 கோடி மதிப்பில் புதிய திட்டப்பணிகளுக்கு இன்று அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கி வைத்தார் அமைச்சர் சேகர்பாபு! appeared first on Dinakaran.

Read Entire Article