திருச்சி: மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை- நீதிபதி தீர்ப்பு

1 month ago 6

திருச்சிராப்பள்ளி மாவட்டம், உப்பிலியபுரம் அருகே, கோணக்கரை கிராமத்தில் கடந்த 2024 ஜூன் 1-ம் தேதி அப்பகுதியைச் சேர்ந்த நடேசன் மகன் சிவக்குமார் (வயது54), தனது மனைவி செங்கொடி (வயது 43) நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை குழவிக்கல்லால் தாக்கி கொலை செய்தார். இது தொடர்பாக இறந்தவரின் மகன் சங்கேஸ்வரன் கொடுத்த புகாரின்பேரில், சிவக்குமார் மீது உப்பிலியபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். அவ்வழக்கின் விசாரணை திருச்சி மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் நேற்று (28.03.2025) அரசு தரப்பு வழக்கறிஞர் சவரிமுத்து ஆஜராகி வாதிட்ட நிலையில், திருச்சி முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி கிறிஸ்டோபர் தீர்ப்பு வழங்கினார். அதில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து அவர் உத்தரவிட்டார்.

இவ்வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுதந்தமைக்காக துறையூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மற்றும் காவலர்களை திருச்சி மாவட்ட எஸ்.பி. செல்வநாகரத்தினம் பாராட்டினார்.

Read Entire Article