திருச்சி பாரதிதாசன் பல்கலை.யில் மனித உரிமை மீறல்கள்: ஆளுநரிடம் மேடையில் புகார் மனு அளித்த ஆய்வு மாணவர்

2 weeks ago 5

திருச்சி: திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 39-வது பட்டமளிப்பு விழா, பல்கலைக்கழக பேரூர் வளாகத்தில் இன்று (அக்.29) நடைபெற்றது. அப்போது ஆய்வு மாணவர் ஒருவர், பல்கலைக்கழகத்தில் மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட பிரச்சினைகள் இருப்பதாகக் கூறி ஆளுநரிடம் மேடையிலேயே புகாரளித்தார்.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 39-வது பட்டமளிப்பு விழாவில் பல்கலை. துணை வேந்தர் எம்.செல்வம் வரவேற்றார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று மாணவ - மாணவியருக்கு பட்டங்களை வழங்கினார். இதில் 430 பேர் முனைவர் பட்டம், 90 பேர் தங்கப் பதக்கம் என மொத்தம் 520 பேர் பட்டம் பெற்றனர். உயர் கல்வித் துறை அமைச்சரும், பல்கலைக்கழகத்தின் இணை வேந்தருமான கோவி.செழியன் ஆளுநர் பங்கேற்ற இவ்விழாவை புறக்கணித்தார். மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆய்வுமன்ற தலைமை இயக்குநரும், அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சித் துறை செயலாளருமான ந.கலைச்செல்வி முதன்மை விருந்தினராக பங்கேற்று பட்டமளிப்பு விழா பேருரை நிகழ்த்தினார். பதிவாளர் (பொறுப்பு) காளிதாசன், ஆட்சிமன்றக் குழுவினர், பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Read Entire Article