திருச்சி, தில்லைநகர் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

14 hours ago 3

திருச்சி,

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம் திருச்சி நகரியம் இயக்கலும் பராமரித்தலும் செயற்பொறியாளர் முத்துராமன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருச்சி தில்லைநகர் பகுதியில் மாநகராட்சியால் பாதாள சாக்கடை பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் நாளை (புதன்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தில்லைநகர் முதல் கிராஸ், (மேற்கு) 2-வது கிராஸ், 3-வது கிராஸ், சாஸ்திரிரோடு வடகிழக்கு விஸ்தரிப்பு, 1 முதல் 5 கிராஸ் வரை, தேவர்காலனி, சாலைரோடு கிழக்கு(தில்லைநகர் சந்திப்பு முதல் மாரீஸ் மேம்பாலம் வரை)மலைக்கோட்டை காலனி, கரூர் பைபாஸ்ரோடு, அண்ணாமலைநகர் ஒரு பகுதி ஆகிய இடங்களில் மின்சார வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Read Entire Article