திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்து உள்பட அடுத்தடுத்து ஐந்து வாகனங்கள் மோதி விபத்து: திருமணத்திற்கு சென்ற பெண்ணுக்கு காயம்

3 months ago 6

செங்கல்பட்டு: காட்டாங்கொளத்தூர் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்து உள்பட ஐந்து வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், திருமணத்திற்கு சென்ற ஒரு பெண்ணிற்கு மட்டும் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஜிஎஸ்டி சாலையில், நேற்று முன்தினம் இரவு திருச்சி-சென்னை சாலை மார்க்கத்தில் சிக்னலுக்காக 2 கார்கள் நின்று கொண்டிருந்தன. அதன்பின்னால், ஒரு தனியார் பேருந்து, வேன் ஆகியவையும் நின்றிருந்தன.

அப்போது, விழுப்புரத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசு பேருந்து, முன்னே நின்றிருந்த ஒரு வேன், தனியார் பேருந்து மற்றும் 2 கார்களின் மீது அடுத்தடுத்து மோதி விபத்துக்கு உள்ளாகின. இதில், 2 கார்கள் உள்பட 5 வாகனங்களும் பலத்த சேதமடைந்தன. இந்த விபத்தில், தனியார் வேனில் இருந்து திருமண கோஷ்டியை சேர்ந்த ஒரு பெண்ணிற்கு தலையில் மட்டும் அடிபட்டது.

எனினும், இவ்விபத்தில் எவ்வித உயிர் சேதமும் ஏற்படவில்லை. இதுகுறித்து தகவலறிந்ததும் தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து வந்தனர். அங்கு விபத்தில் காயமடைந்த 2 பேரையும் மீட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தில் சிக்கிய 5 வாகனங்களையும் அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர். இவ்விபத்து குறித்து போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

The post திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்து உள்பட அடுத்தடுத்து ஐந்து வாகனங்கள் மோதி விபத்து: திருமணத்திற்கு சென்ற பெண்ணுக்கு காயம் appeared first on Dinakaran.

Read Entire Article