திருச்சி சூர்யாவுக்கு போலீஸ் பாதுகாப்பு தேவையில்லை: அரசு மனு தாக்கல்

4 months ago 16

மதுரை: திருச்சி சூர்யாவுக்கு தற்போதுள்ள சூழலில் போலீஸ் பாதுகாப்பு தேவையில்லை என உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

திமுக எம்பி-யான திருச்சி சிவாவின் மகன் திருச்சி சூர்யா, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், ‘நான் சமூக ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சி விவாத மேடைகளிலும் பங்கேற்று வருகிறேன். சமீபத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து 15 ஆடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தேன். இதனால் சீமான் என்னை பழிவாங்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறார். அவர் கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகன் எனக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் சமூக வலை தளங்களில் வீடியோ வெளியிட்டு வருகிறார். இவர்கள் என் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

Read Entire Article