திருச்சி, பிப்.14: திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின்கீழ் விழிப்புணர்வு ஓட்டப்போட்டியில் கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு ஓடினர். திருச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக “பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம்” பெண் குழந்தைகளின் பாலின சமநிலையை மேம்படுத்திடவும் பெண் குழந்தைகள் கல்வி கற்பதை உறுதி செய்யும் திட்டத்தினை செயல்படுத்தும் பொருட்டு பெண்களுக்கான விழிப்புணர்வு ஓட்டம் அண்ணா விளையாட்டரங்க சுற்றுபாதையில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப்குமார் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பெண்களுக்கான விழிப்புணர்வு ஓட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்கள் கலந்துக்கொண்டனா். மேலும், இப்போட்டிகளில் வெற்றிபெறுபவர்களுக்கு முதல் பரிசு ரூ.3ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.2ஆயிரம், மூன்றாம் பரிசு ஆயிரம், மற்றும் 4 முதல் 13 இடங்கள் பெறும் 10 நபர்களுக்கு ஆறுதல் பரிசாக தலா ரூ.500 வீதமும் என மொத்த பரிசுத்தொகையாக ரூ.11ஆயிரம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் சுகந்தி, மாவட்ட சமூக நல அலுவலா் விஜயலெட்சுமி, வட்டாட்சியா் பிரகாஷ், பள்ளி, கல்லூரி மாணவிகள், பயிற்றுநா்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் பெண் குழந்தைகளை காப்போம் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி appeared first on Dinakaran.