திருச்சானூர் கோவிலில் லட்ச குங்குமார்ச்சனை

2 hours ago 2

திருச்சானூர்:

அம்மன் கோவில்களில் பிரம்மோற்சவம் போன்ற மிகப்பெரிய திருவிழாக்களை தொடங்குவதற்கு முன்பு, "லட்ச குங்குமார்ச்சனை" நடத்துவது வழக்கம். இந்த தனித்துவமான சடங்கை செய்து தேவியை திருப்திப்படுத்துவதன் மூலம் தேவியின் அருளால் விழா சுமூகமாகவும் வெற்றிகரமாகவும் நடந்தேறும் என்பது ஐதீகம்.

திருச்சானூரில் உள்ள பிரசித்தி பெற்ற பத்மாவதி தாயார் கோவிலிலும் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு மங்களகரமான லட்ச குங்குமார்ச்சனையை தேவஸ்தானம் நடத்தி வருகிறது.

அவ்வகையில், திருச்சானூரில் நாளை கார்த்திகை பிரம்மோற்சவம் தொடங்க உள்ள நிலையில், இன்று லட்ச குங்குமார்ச்சனை நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட ஆசனத்தில் எழுந்தருளிய பத்மாவதி தாயாருக்கு அர்ச்சகர்கள் லட்ச குங்குமார்ச்சனை நடத்தினர்.

இந்த சிறப்பு வழிபாட்டில் கோவில் அதிகாரிகள், அர்ச்சகர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Read Entire Article