
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் சித்திரை பெருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் ஏழாம் நாளான இன்று தேர்த் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. சென்னை, செங்கல்பட்டு மாவட்ட சுற்றுவட்டார பகுதி பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
முன்னதாக வேதகிரீஸ்வரர், திரிபுரசுந்தரி அம்மன், விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகளுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.