திரிப்தி டிம்ரி படத்தில்...2 சிறப்பு பாடலுக்கு நடனமாடும் திஷா பதானி?

2 days ago 4

மும்பை,

இந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியான 'தேவா' படத்தில் கடைசியாக நடித்திருந்த ஷாஹித் கபூர், தற்போது இயக்குனர் விஷால் பரத்வாஜுடன் தனது அடுத்த படத்தில் நடித்து வருகிறார்.

திரிப்தி டிம்ரி கதாநாயகியாக நடிக்கும் இந்த மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் வருகிற டிசம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்தில் நடிகை திஷா பதானி இணைந்திருக்கிறார். இதனை இயக்குனர் விஷால் பரத்வாஜ் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்திருக்கிறார். இப்படத்தில் அவர் 2 சிறப்பு பாடலுக்கு நடனமாட உள்ளதாக திரை வட்டாரத்தில் பேசப்படுகிறது.

முதல் முறையாக திஷா பதானி , ஷாஹித் கபூருடன் இணைந்திருப்பது, ரசிகர்களை மகிழ்ச்சியடையச் செய்திருக்கிறது.

Read Entire Article