திராவிடர் விடுதலை கழக பிரசார கூட்டம்

6 hours ago 3

சேலம், மார்ச் 18: திராவிடர் விடுதலை கழகம் சார்பில், `பெரியார் ஏன் எதிரிகளை பதற வைக்கிறார்’ என்ற வாகன பரப்புரை, சென்னை, விழுப்புரம், சேலம், ஈரோடு மற்றும் திண்டுக்கல் என 5 இடங்களில் இருந்து தொடங்கியது. அதன்படி கொளத்தூரில் நேற்று முன்தினம் தொடங்கிய விழிப்புணர்வு வாகன பிரசாரம், நேற்று சேலம் வந்தடைந்தது.

இதனையடுத்து கோட்டை மைதானத்தில், மாவட்ட செயலாளர் டேவிட், விசிக மாவட்ட செயலாளர் காஜாமைதீன் ஆகியோர் வாகனத்தை வரவேற்றனர். பின்னர், பிரசார குழுவினர் பெரியாரின் ெகாள்கைகள், சமூகத்தில் கொண்டுவந்த மாற்றங்கள் குறித்து எடுத்துரைத்தனர். தொடர்ந்து நாமக்கல் சென்ற இவ்வாகனம், வரும் 22ம் தேதி மயிலாடுதுறையில் நிறைவுபெறுகிறது.

The post திராவிடர் விடுதலை கழக பிரசார கூட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article