சென்னை: திராவிட மாடல் அரசு கல்விக்குச் செய்தது என்ன என்று கண்மூடிக் கேட்பவர்களுக்கு இதோ பதிலடி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது;
திராவிட மாடல் கல்விக்குச் செய்தது என்ன என்று கண்மூடிக் கேட்பவர்களுக்கு…
நாம் ஆட்சிப் பொறுப்பேற்ற பின், அரசு ஐ.டி.ஐ.க்களை தரம் உயர்த்த டாடா டெக்னாலஜிஸ் உடன் கைகோத்து பயணத்தைத் தொடங்கினோம். கடந்த ஆண்டு நானும் டாடா குழுமத் தலைவரும் இதற்கான இத்திட்டத்தைத் தொடங்கினோம்.
இன்று, தொழிற்பயிற்சி நிலையங்களுக்கான அகில இந்தியத் தொழிற் தேர்வுகளில் முதலிடம் பெற்று தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்த 29 மாணவ – மாணவியரையும் ஒரு பயிற்றுநரையும் பார்த்தபோது பெருமிதத்தால் பூரித்துப் போனேன்.
அதிலும் கூடுதல் மகிழ்ச்சிக்குக் காரணம் என்னவென்றால், இதில் பெரும்பாலானோர் மாணவிகள்!
கீழுள்ள புகைப்படங்களே திராவிட மாடலைக் கேள்வியெழுப்பும் அந்த வீணர்களுக்கான பதிலடி…!. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
The post திராவிட மாடல் அரசு, கல்விக்கு செய்தது என்ன என கேட்பவர்களுக்கு சாதனை மாணவ, மாணவிகளே சாட்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!! appeared first on Dinakaran.