அரியலூர், டிச. 21: அரியலூர் மாவட்டம் செந்துறை வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட தளவாய் கிராமத்தில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தளவாய் ஊராட்சியில் திராவிட மாடல் அரசின் சாதனை விளக்க தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நேற்று நடைபெற்றது. போக்குவரத்து துறை அமைச்சரும்,அரியலூர் மாவட்ட திமுக செயலாளாளருமான சா.சி.சிவசங்கர் வழிகாட்டுதலின் படி குன்னம் சட்ட மன்ற தொகுதி, செந்துறை வடக்கு ஒன்றியம் தளவாய் கிராமத்தில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சார கூட்டத்திற்கு, செந்துறை வடக்கு ஒன்றிய செயலாளர் எழில் மாறன் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் ஆம்பூர் தர்மன், கழக இளம் பேச்சாளர் சேக் அலிமா அலி ஆகியோர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு திராவிட மாடல் அரசின் மக்கள் நல திட்டங்கள் குறித்து சிறப்புரையாற்றினர். முன்னதாக பிரச்சார கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் மாவட்ட பிரதிநிதி ஆறுமுகம் வரவேற்றார் .கூட்ட முடிவில் மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் செல்வம் நன்றி கூறினார்.
கூட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் சுமதி கருணாநிதி, ஒன்றிய துணை செயலார்கள் ஆசை தம்பி, சத்யபாமா புலேந்திரன், துரை ரவி, ஒன்றிய பொருளாளர் நன்னன், மாவட்ட பிரதிநிதிகள் கோடி, சபாபதி, மாவட்ட மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளர் சித்ரா, மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி துணை அமைப்பாளர் செல்வம், குன்னம் தொகுதி ஒருங்கிணைப்பாளர் இலக்கியா, ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர்கள் கடலரசு,சக்திவேல், சுகன்யா, வெற்றி,மணிவேல், சிகாமணி, மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
The post திராவிட மாடல் அரசின் சாதனை விளக்க தெரு முனை பிரச்சார கூட்டம் appeared first on Dinakaran.