சிவகங்கை, ஏப். 2: சிவகங்கையில் திராவிட கருத்தியல் ஆசிரியர் சங்க மாநில அளவிலான இணைய வழி கூட்டம் நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் மாரப்பன் தலைமை வகித்தார். மாநில ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் தேன்மொழி வரவேற்றார். இக்கூட்டத்தில் மாநிலம் முழுவதும் திராவிடக் கருத்தியல் சங்கத்தை ஒருங்கிணைத்து வரும் 15க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள், பேராசிரியர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் 104 கல்லூரிகளில் திராவிடக் கருத்தியல் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளது, 15 பல்கலைக்கழகங்களில் கிளைகள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது குறித்து விவாதிக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் 9 இடங்களில் கருத்தரங்கங்கள் நடத்துவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பேராசிரியர் தனிஸ்லாஸ் கூறினார்.
The post திராவிட கருத்தியல் ஆசிரியர் சங்க கூட்டம் appeared first on Dinakaran.