திரளான பக்தர்கள் தரிசனம் வளநாடு அருகே சாலையோர பள்ளத்தில் சொகுசு கார் கவிழ்ந்தது

3 days ago 6

 

துவரங்குறிச்சி, மே8:வளநாடு அருகே சாலையோர பள்ளத்தில் சொகுசு கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிர் தப்பினர். திருச்சி மாவட்டம் மருங்காபுரி ஒன்றியம் கல்லுப்பட்டியை சேர்ந்தவர் ராகுல் (18). இவரது நண்பர் வளநாடு கைகாட்டியை சேர்ந்த பாண்டி (18). இருவரும் வளநாடு பகுதியில் இருந்து கைகாட்டி நோக்கி சொகுசு காரில் சென்று கொண்டிருந்தனர். காரை ராகுல் ஓட்டினார். இந்நிலையில் திடீரென கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் உருண்டது. இதில் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் இருவரும் உயிர் தப்பினர். உடனே அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு மணப்பாறை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வளநாடு போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post திரளான பக்தர்கள் தரிசனம் வளநாடு அருகே சாலையோர பள்ளத்தில் சொகுசு கார் கவிழ்ந்தது appeared first on Dinakaran.

Read Entire Article