தண்டையார்பேட்டை: வண்ணாரப்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள சர்.பி.டி.தியாகராயா கல்லூரியில், என்.சி.சி மாணவர்களுக்கு இடையேயான போட்டிகள் நேற்று தொடங்கியது. 2 நாட்கள் நடைபெறும் இந்த போட்டிகளில் பச்சையப்பன் கல்லூரி, பாரதி மகளிர் கல்லூரி, அம்பேத்கர் கல்லூரி, ஜெயா கல்லூரி உள்ளிட்ட 15 கல்லூரிகளை சேர்ந்த 480 என்.சி.சி மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனர். இதில், அணிவகுப்பு, கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெறுகிறது. செயலாளர் சிரஞ்சீவி, ஹேமந்த்குமார், கல்லூரி முதல்வர் தியாகராஜன், மேஜர் மதுசூதனன் மற்றும் என்.சி.சி அதிகாரி கேப்டன் மோகன்ராஜ் ஆகியோர் பங்கேற்று, மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று, போட்டிகளை தொடங்கி வைத்தனர். இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகள் வழங்கப்பட்டது. இதனை தியாகராய கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்கள் 7வது ஆண்டாக நடத்துகிறார்கள். இதன் மூலம் மாணவர்களுக்கு ஒழுக்கத்தையும், நேர்மையையும் கற்றுக் கொடுக்கும் விதமாக போட்டிகள் நடத்தப்பட்டு வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.
The post தியாகராயா கல்லூரியில் என்சிசி மாணவர்களுக்கான போட்டி: 15 கல்லூரிகள் பங்கேற்பு appeared first on Dinakaran.