சென்னை: திமுகவை அழிக்க நினைப்பது அழிவுக்கு தொடக்கப் புள்ளி. அறிவாலயத்தை அசைத்து பார்க்க நினைத்தவர்கள் மண்ேணாடு மண்ணாக போனதுதான் வரலாறு என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார். சென்னை மாநகராட்சி, அம்பத்தூர் மண்டலத்தில் ரூ.8.25 கோடி மதிப்பிலான திட்ட பணிகளுக்கான தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. அம்பத்தூர் மண்டலக்குழு தலைவர் பி.கே.மூர்த்தி தலைமை வகித்தார். இதில், அமைச்சர் சேகர்பாபு, அம்பத்தூர் எம்எல்ஏ ஜோசப் சாமுவேல் மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோர் கலந்துகொண்டு தொடங்கி வைத்தனர்.
அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது: அறிவாலயத்தை அசைத்து பார்க்க நினைத்தவர்கள் அடங்கி மண்ணோடு மண்ணாக போனதுதான் வரலாறு. திராவிட இயக்கத்தில் தொண்டன் முதல் தலைவர்கள் வரை தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்து தமிழ்நாட்டு அரசியலை கரைத்துக் குடித்தவர்கள். அண்ணாமலை போல் இறக்குமதி செய்யப்பட்டவர்கள் இல்லை. திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆலயமாக கருதப்படும் அறிவாலயத்தை தொட்டுக்கூட பார்க்க முடியாத அவர் எப்படி செங்கற்களை பிடுங்க முடியும்.
முதல்வரையும், 70 ஆண்டுகள் கடந்த திராவிட கழகத்தையும் அசைத்துப் பார்க்க இன்னொருவர் பிறந்து வரவேண்டும். தமிழ்நாட்டில் அண்ணாமலை எங்கு நின்றாலும் அவரை புறமுதுகிட்டு ஓடச் செய்ய திராவிட முன்னேற்றக் கழகத்தின் கடைக்கோடி தொண்டன் ஒருவரை நிறுத்தி அவரை மண்ணைக் கவ்வ வைப்போம்.
திட்டங்கள் என்ற பெயரில் பட்டியலின மக்களின் நிலங்கள் ஆட்சியாளர்களால் அபகரிக்கப்படுகிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம் குற்றச்சாட்டு வைத்தது, தனிப்பட்ட நிலங்கள் அபகரிக்கப்பட்டது பற்றிதான். மொத்தமாக பட்டியலின மக்களின் நிலங்கள் அபகரிக்கப்படுவதை இந்த ஆட்சி ஏற்காது. இவ்வாறு பேசினார்.
The post திமுகவை அழிக்க நினைப்பது அழிவுக்கு தொடக்க புள்ளி அறிவாலயத்தை அசைத்து பார்க்க நினைத்தவர்கள் மண்ணோடு மண்ணாக போனதுதான் வரலாறு: அமைச்சர் சேகர்பாபு பேட்டி appeared first on Dinakaran.