திமுக வேட்பாளர் சந்திரகுமார் 17ம் தேதி வேட்பு மனுத்தாக்கல்

3 weeks ago 4

ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு பிப்ரவரி 5ம் தேதி இடைத்தேர்தல்நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 10ம் தேதி தொடங்கியது. 17ம் தேதி வேட்புமனுத் தாக்கலுக்கு கடைசி நாள். 18ம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, 20ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். வேட்பு மனுதாக்கல் தொடங்கிய முதல் நாளில் வேட்பாளர்கள் 3 சுயேட்சைகள் மனு தாக்கல் செய்தனர். திமுக கூட்டணியில் கடந்த முறை காங்கிரஸ் போட்டியிட்ட நிலையில், இந்த முறை திமுகவே இந்த தொகுதியில் நேரடியாக போட்டியிடுகிறது.

திமுக வேட்பாளராக இந்த தொகுதியின் முதல் எம்எல்ஏவும், திமுக கொள்கை பரப்பு இணை செயலாளர் வி.சி.சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுக கூட்டணி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் யாரும் போட்டியில்லை என அறிவித்து உள்ளனர். இதனால் முக்கிய எதிர்க்கட்சிகள் இந்த தேர்தலை புறக்கணித்து உள்ளது. இந்த சூழலில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் வருகிற 17ம் தேதி வேட்பு மனுத்தாக்கல் செய்ய உள்ளதாக அமைச்சர் சு.முத்துசாமி நேற்று தெரிவித்தார்.

 

The post திமுக வேட்பாளர் சந்திரகுமார் 17ம் தேதி வேட்பு மனுத்தாக்கல் appeared first on Dinakaran.

Read Entire Article