சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி பாடுபடும் என வேல்முருகன் அறிவித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு மாநிலத்தின் வளர்ச்சிக்கு போற்றுதலுக்குரிய வகையில் செயல்பட்டு வருகிறது. திமுகவுக்கு மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு இருக்கிறது என்பதை எவராலும் மறுக்க முடியாது. ஈரோடு கிழக்கில் திமுக வேட்பாளர் சந்திரசேகர் பெரும் வாரியாக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்றும் கூறியுள்ளார்.
The post திமுக வெற்றிக்கு த.வா.க. பாடுபடும்: வேல்முருகன் appeared first on Dinakaran.