சென்னை: திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி மாநில நிர்வாகிகள் நியமனம் செய்து பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியில் ஏற்கனவே நியமிக்கப்பட்ட மாநில துணைச் செயலாளர்கள் பொன்.கவுதமசிகாமணி, ஜே.எல்.ஈஸ்வரப்பன், நெல்லை வே.நம்பி ஆகியோர் இரண்டு பொறுப்புகள் வகித்து வருவதால், அவர்களை விளையாட்டு மேம்பாட்டு அணி துணைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவித்து, அவர்களுக்கு பதிலாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ளவர்களுடன், விளையாட்டு மேம்பாட்டு அணி மாநில நிர்வாகிகள் மாற்றி அமைத்து அறிவிக்கப்படுகிறது.
திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி மாநில செயலாளர் தயாநிதி மாறன் எம்.பி., துணைச் செயலாளர்கள்- எஸ்.ஆர்.பார்த்திபன் (சேலம்), ஆர்.கோபால்ராம் (சென்னை), எஸ்.கார்த்திக் (கரூர்), மு.வாசிம்ராஜா (குன்னூர், நீலகிரி) சுரேஷ் ஜே.மனோகரன் (மதுரை), செல்வி நிவேதா ஜேசிகா (சென்னை), வே.கவுதமன் (சென்னை), தனுஷ் எம்.குமார் (விருதுநகர்), திருவரங்கம் நா.ஆனந்த் (திருச்சி), வழக்கறிஞர் பி.கே.பாபு (சென்னை), முகமது இஷ்ரத் (சென்னை) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி மாநில நிர்வாகிகள் நியமனம்: பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு appeared first on Dinakaran.