திமுக முன்னாள் எம்.பி. மரணம்: துணை முதல்வர் நேரில் அஞ்சலி

1 month ago 4

கோவை: கோவை ராமநாதபுரம் சுங்கம் கலைஞர் நகரை சேர்ந்தவர் இரா. மோகன் (82). இவர் 1980ல் கோவை தொகுதி எம்.பி.யாகவும், 1989ல் கோவை சிங்காநல்லூர் தொகுதி எம்எல்ஏவாகவும் இருந்துள்ளார். சமீப காலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார்.

இந்நிலையில், நேற்று அதிகாலை உயிரிழந்தார். கோவையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட இரா.மோகன் உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர், குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அவருடன், அமைச்சர் செந்தில் பாலாஜி, முன்னாள் ஒன்றிய அமைச்சர் மு.கண்ணப்பன் ஆகியோரும் வந்து அஞ்சலி செலுத்தினர்.

முதல்வர் இரங்கல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தி: கோவை முன்னாள் எம்பி இரா.மோகன் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மாணவ பருவத்திலேயே திமுகவின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட அவர், 13 வயதிலேயே நகர்மன்ற தேர்தலில் கையில் இருவண்ணக் கொடியேந்தி, திமுக வேட்பாளர்களுக்காக வீதிவீதியாக வாக்கு சேகரித்தவர். இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் பங்கெடுத்தவர். எமர்ஜென்சி காலத்தில் சிறைவாசம் அனுபவித்தவர். கலைஞரின் பேரன்பிற்கு பாத்திரமானவர். இன்று அவர் மறைந்த வேதனை மிகுந்த செய்தியால் கலங்கி நிற்கிறேன் என கூறியுள்ளார்.

The post திமுக முன்னாள் எம்.பி. மரணம்: துணை முதல்வர் நேரில் அஞ்சலி appeared first on Dinakaran.

Read Entire Article