திமுக மாணவர் அணி சார்பில் டெல்லியில் 6-ம் தேதி மாபெரும் ஆர்ப்பாட்டம்

3 hours ago 1

சென்னை,

திமுக மாணவர் அணி செயலாளர் எழிலரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மத்திய பாஜக அரசின் பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு வெளியிட்டுள்ள வரைவு நெறிமுறைகள் 2025-ஐ திரும்பப் பெற வலியுறுத்தி, கழகத் தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினின் அறிவிப்பிற்கிணங்க, துணை முதல்-அமைச்சர்உதயநிதி ஸ்டாலினின் வழிகாட்டுதலோடு, தலைநகர் டெல்லி, ஜந்தர் மந்தரில் திமுக மாணவர் அணி சார்பில், வருகிற (06.02.2025) அன்று காலை 10.00 மணியளவில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துக் கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

திமுக மாணவர் அணியின் மாநில, மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள் தங்களது துணை அமைப்பாளர்கள் மற்றும் மாணவர் அணியினருடன் பெருமளவில் பங்கேற்று ஆர்பாட்டத்தை வெற்றியடைச் செய்ய வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.மாணவர்களின் கல்வி உரிமை; தமிழ்நாட்டின் மாநில உரிமையை காத்திட நாம் அனைவரும் அணி திரள்வோம். யு.ஜி.சி.யின் அதிகார அத்துமீறலை முறியடிப்போம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read Entire Article