திமுக புதிய அமைச்சர் கோவி.செழியனுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் பாராட்டு

3 months ago 23

சென்னை: தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டு, புதிதாக 4 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர். 6 அமைச்சர்களின் இலாகாக்களும் மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி, செந்தில் பாலாஜி, ராஜேந்திரன், கோவி.செழியன், சா.மு.நாசர் ஆகியோர் புதிய அமைச்சர்களாக நேற்று முன்தினம் சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்நிலையில், உயர்கல்வித்துறை அமைச்சராக பதவி ஏற்றுள்ள கோவி.செழியனுக்கு முன்னாள் அதிமுக அமைச்சர் வைகைச்செல்வன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “நானும் கோவி.செழியனும் ஒரே நாளில் முனைவர் பட்டம் பெற்றோம். எளியவன் நான் பள்ளிக்கல்வி அமைச்சராக பணியாற்றினேன். இப்போது அவர் உயர்கல்வி அமைச்சராகி இருக்கிறார். எனது மனமார்ந்த பாராட்டுக்கள். பட்டியலினத்தவருக்கு உயர்கல்வி அமைச்சர் பதவி… பாராட்டாமல் இருக்க முடியுமா..?” என்று கூறியுள்ளார். திமுக அமைச்சருக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஒருவர் பாராட்டு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post திமுக புதிய அமைச்சர் கோவி.செழியனுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் பாராட்டு appeared first on Dinakaran.

Read Entire Article