திமுக தேர்தல் ஒருங்கிணைப்புக்குழு இன்று ஆலோசனை

3 months ago 24

சென்னை,

வரும் 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்காக திமுகவில் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு ஒன்றை கட்சியின் தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் அமைத்தார். இந்த குழுவில் அமைச்சர்கள் நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் மற்றும் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்தக் குழு திமுகவில் மேற்கொள்ள வேண்டிய மாறுதல்கள், அமைப்பு ரீதியிலான சீரமைப்புகளை தலைமைக்கு தெரிவிக்கும். மேலும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவின் முதல் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், குழுவின் அடுத்தக்கட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டன. அடுத்து வரும் தேர்தலில் தொகுதிகள் அடிப்படையில் பிரித்து நிர்வாகிகள் பணியாற்றும் வகையில் மாவட்ட செயலாளர்களை அழைத்து சந்தித்து, அவர்களிடம் கருத்து கேட்கவும் முடிவெடுக்கப்பட்டது.

இந்த நிலையில், திமுக தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு இன்று மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை நடத்துகிறது; துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை கொண்ட ஐவர் குழு, தகவல் தொழில் நுட்ப அணி உள்பட 3 அணிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளது. அமைச்சரவை மாற்றம், துணை முதல்-அமைச்சர் நியமனத்திற்குப் பின் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடைபெறுவது முக்கியம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Read Entire Article