சென்னை கிழக்கு கடற்கரை சாலை சம்பவத்தில் கைதான முக்கிய குற்றவாளி அதிமுக குடும்பத்தை சேர்ந்தவர் தெரிந்துவிட்டது. திமுக மீது பொய் பழி போட்ட எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி மன்னிப்பு கேட்பாரா என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைதள பதிவில் நேற்று கூறியுள்ளதாவது: திமுக ஆட்சியின் நலத் திட்டங்களால் பெண்கள் முன்னேறுவதை எதிர்க்கட்சிகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இதனால், திமுக அரசு மீது பழி போட முயற்சிப்பதும், சில நாட்களிலேயே உண்மை தெரியவந்து, அந்த முயற்சி தோல்வியடைவதும் வாடிக்கையாகிவிட்டது.