திமுக கூட்டணி 2026ல் வெல்லும்: சண்முகம்

2 months ago 11

மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் பேசியதாவது: பாஜ அரசு ஒரு மூர்க்கத்தனமான மோதல் போக்கை தமிழ்நாடு மீது எடுத்துள்ளது. மாநில அதிகார பறிப்பு, நிதி மறுப்பு, மொழி திணிப்பு, தொகுதிகள் பறிப்பு என பாஜ அரசு அடுக்கடுக்கான தாக்குதலை தொடுத்துள்ளது, எப்படி இங்கு மதசார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படுகிறதோ, அதுபோன்று பாஜ அரசை அதிகாரத்தில் இருந்து தூக்கி எறிய வேண்டும்.

தமிழகத்தில் பல மக்கள் நல திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தந்துள்ளார். இந்த திட்டங்கள் எல்லாம் நீண்ட கால பலனை அளிக்க கூடிய திட்டங்கள். அரசின் திட்டங்கள் எல்லாமே தொடர்ந்து பொதுக்கூட்டத்தில் அமைச்சர்கள் சொல்கிறார்கள். அதற்கு மகிழ்ச்சி. மீதமுள்ள திட்டங்களையும் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். 2026ம் ஆண்டு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் திமுக கூட்டணி வெற்றி பெறும். இவ்வாறு அவர் பேசினார்.

The post திமுக கூட்டணி 2026ல் வெல்லும்: சண்முகம் appeared first on Dinakaran.

Read Entire Article