சென்னை: வரும் ஜுன் மாதம் நடைபெற இருக்கும் மாநிலங்களவைத் தேர்தலுக்கான மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளராக அக்கட்சித் தலைவர் கமல்ஹாசனை தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சியின், நிர்வாகக்குழு செயற்குழு கூட்டம் இன்று (மே 28) நடைபெற்றது. அதில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அவை வருமாறு:
தீர்மானம் 1 : 2024ம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தலின் போது திராவிட முன்னேற்றக் கழகத்துடன் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 2025-ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் ஒரு இடம் ஒதுக்கப்படும் என முடிவு செய்யப்பட்டது.
அதன் அடிப்படையில், வருகிற ஜூன் 19-ம் தேதி நடைபெற இருக்கும் 6 தமிழக நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளராக, கமல்ஹாசனை மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு, செயற்குழு ஏகமனதாக முடிவு செய்து அறிவிக்கிறது.
தீர்மானம் 2 மாநிலங்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளரான கமல்ஹாசனுக்கு தங்களது மேலான ஆதரவை நல்கும்படி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளை மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு, செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
The post திமுக ஆதரவில் மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன்!! appeared first on Dinakaran.