வாஷிங்டன் : மானியம் மட்டும் எலானுக்கு கிடைக்காவிட்டால் இந்நேரம் கடையை மூடிவிட்டு சொந்த நாட்டுக்கே போயிருப்பார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். எலான் மஸ்க் தனது சொந்த நாடான தென் ஆப்பிரிக்காவுக்கே சென்றிருப்பார் என்று டிரம்ப் பதிலடி கொடுத்துள்ளார். வரலாற்றில் இதுவரை யாரும் பெறாத அளவுக்கு எலானுக்கு அதிகளவில் மானியம் தரப்பட்டுள்ளது என்றும் மானியம் இல்லாவிட்டால் ராக்கெட் ஏவுதல், மின்சார கார் உற்பத்தியை எலான் மஸ்கால் செய்திருக்க இயலாது என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
The post மானியம் இல்லாவிட்டால் ராக்கெட் ஏவுதல், மின்சார கார் உற்பத்தியை எலான் மஸ்கால் செய்திருக்க இயலாது : அதிபர் டிரம்ப் பதிலடி appeared first on Dinakaran.