சென்னை: தமிழகத்தில் நடைபெற உள்ள 2026 சட்டப்பேரவை தேர்தலில் வாரிசு அரசியல் மற்றும் குடும்ப ஆட்சி முடிவுக்கு வரும் என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் கட்சியின் கணக்கு வழக்குகளை அமைப்பு செயலாளர் சி.விஜயபாஸ்கர் வாசித்தார். பின்னர் கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி பேசியதாவது: கடந்த 2016 சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி இன்றி, 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு பெற்றி பெற்ற கட்சி அதிமுக. அதன் பலத்தை கட்சியினர் தெரிந்து கொள்ள வேண்டும்.