திண்டுக்கல்லில் மதுவிலக்கு பறிமுதல் வாகனங்கள் டிச.27ல் பொது ஏலம்

3 weeks ago 6

 

திண்டுக்கல், டிச. 25: திண்டுக்கல் மாவட்டத்தில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 28 இரண்டு, மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் டிச.27ம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலத்தில் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. பொது ஏலத்தில் கலந்து கொண்டு வாகனத்தை ஏலம் எடுக்க விரும்புபவர்கள் ஏல முன் பணம் ரூ.1000 செலுத்தி அனுமதி சீட்டு பெற்று கொள்ள வேண்டும்.

அனுமதி சீட்டு டிச.26 தேதி மாலை 5 மணி வரை திண்டுக்கல் ரவுண்ட் ரோடு, தாலுகா போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு அலுவலகத்தில் விநியோகிக்கப்படும். மேலும் ஏலத்தில் கலந்து கொண்டு வாகனத்தை ஏலத்தில் பெறும் நபர்கள் ஏலத்தொகை முழுவதையும் 18 சதவீத ஜிஎஸ்டி உட்பட முழு தொகையையும் செலுத்தி வாகனத்தை பெற்று கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு 9787814425, 9751123567 அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

The post திண்டுக்கல்லில் மதுவிலக்கு பறிமுதல் வாகனங்கள் டிச.27ல் பொது ஏலம் appeared first on Dinakaran.

Read Entire Article