திண்டுக்கல், நவ. 8: திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளி செல்லாக் குழந்தைகள் 6,300 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 6 வயது முதல் 18 வயதுடைய பள்ளி செல்லாத குழந்தைகளை (மாற்றுத்திறன் மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள் உட்பட) கண்டறிய ஆண்டுதோறும் சிறப்பு கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.இதில் கண்டறியப்படும் குழந்தைகள் அருகில் உள்ள பள்ளியில் வயதுக்கேற்ற வகுப்பில் சேர்க்கப்படுவர். அதன்படி இந்த கல்வியாண்டுக்கான (2023-24) பள்ளி செல்லாத குழந்தைகளை கண்டறிவதற்கான கணக்கெடுக்கப்பட்டது.
இதில், திண்டுக்கல் மாவட்டத்தில் 6,300 மாணவ, மாணவியர் பள்ளி செல்லாதது தெரியவந்தது. இதையடுத்து கலெக்டரின் உத்தரவின் பேரில் குழந்தை பாதுகாப்பு அலுவலர்கள், சமூகநலத்துறை அதிகாரிகள், கல்வித்துறை, காவல்துறை, தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் சேர்ந்து தற்போது 12 குழந்தைகள் மீட்கப்பட்டனர். இதையடுத்து அந்த மாணவர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post திண்டுக்கல்லில் பள்ளி செல்லாக் குழந்தைகள் கணக்கெடுப்பு பணி தீவிரம் appeared first on Dinakaran.