திண்டுக்கல், ஜன. 22: திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர் சங்கம் சார்பில் கையெழுத்து இயக்கம் நடந்தது. கோட்ட தலைவர் ராஜா தலைமை வகித்தார். கோட்ட செயலாளர் அருள்தாஸ் வரவேற்றார். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் முபாரக் அலி, செயலாளர் சுகந்தி வாழ்த்தினர். மாநில துணை தலைவர் ராஜமாணிக்கம் கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்து பேசினார்.
கையெழுத்து இயக்கத்தில் மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைத்து வெளியிடப்பட்ட அரசாணையை திரும்ப பெற வேண்டும். சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணி காலமாக அறிவிக்க வேண்டும். மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைந்தால் இளைஞர்களின் வேலைவாய்ப்பு பறிபோகும். மாநில நெடுஞ்சாலைகளை அனைத்தையும் அரசே நிர்வகித்து பராமரிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. கோட்ட பொருளாளர் வெங்கடாசலம் நன்றி கூறினார்.
The post திண்டுக்கல்லில் சாலை பணியாளர் சங்கத்தினர் கையெழுத்து இயக்கம் appeared first on Dinakaran.