திண்டுக்கல்லில் சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாநாடு

3 months ago 20

திண்டுக்கல், அக். 8: திண்டுக்கல்லில் தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாவட்ட மாநாடு நேற்று நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஜெயசீலன் தலைமை வகித்தார். செயலாளர் மணிக்காளை வரவேற்றார். மாநில துணை தலைவர் அய்யங்காளை, பொது செயலாளர் ராமமூர்த்தி, அரசு ஊழியர் சங்க தலைவர்கள் முபாரக் அலி, சுகந்தி, பல்வேறு சங்க நிர்வாகிகள் ராஜமாணிக்கம், பத்மா, ஜெசி, கேசவன் வாழ்த்துரை வழங்கினர்.

மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாவட்ட தலைவராக பழனிச்சாமி, செயலாளராக மணிக்காளை, பொருளாளராக சாரதா, நிர்வாகிகளாக இளங்கோ, சின்னம்மாள், சித்திரக்கலை, துரைராஜ், சுப்புராம், அருணாதேவி, தணிக்கையாளராக விஜயகுமார் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இக்கூட்டத்தில் ஓய்வூதியத்தோடு அகவிலைப்படி, இலவச மருத்துவ காப்பீடு, குடும்ப பாதுகாப்பு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டது.

The post திண்டுக்கல்லில் சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாநாடு appeared first on Dinakaran.

Read Entire Article