திண்டுக்கல்லில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கம்

3 weeks ago 7

 

திண்டுக்கல், ஜன. 12: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது என தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன.19ம் தேதி வரை பொங்கலுக்கு முன்பு சென்னையிலிருந்து திண்டுக்கல், தேனி, பழநி ஆகிய பகுதிகளுக்கு 170 சிறப்பு பஸ்களும், பொங்கலுக்கு பின்பு சொந்த ஊரிலிருந்து சென்னை செல்வதற்கு 265 சிறப்பு பஸ்களும், திருப்பூருக்கு 50, கோவைக்கு 75, திருச்சிக்கு 40 மற்றும் இதர ஊர்களுக்கு 50 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. மேலும் கூட்ட தேவைக்கேற்ப கூடுதல் பஸ்களும் இயக்கப்பட உள்ளன.

திண்டுக்கல், பழநி, திருச்சி, மதுரை ஆகிய இடங்களிலிருந்தும் அவற்றினை சார்ந்த பகுதிகளிலிருந்தும் ஜன.14ம் தேதி முதல் பொங்கல் மற்றும் மகரஜோதியை முன்னிட்டு சபரிமலைக்குச் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை முன்னிட்டு போக்குவரத்து கழகத்தின் மூலம் குமுளிக்கு 100 சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் சிரமமின்றி பயணம் செய்ய ஏதுவாக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம் (OTRS) www.tnstc.in.website, Mobile App மூலம் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் பஸ்களின் இயக்கத்தினை கண்காணிக்க அலுவலர்கள் மற்றும் பயணச்சீட்டு ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post திண்டுக்கல்லில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article