ஒட்டன்சத்திரம், ஜன. 19: திண்டுக்கல்லில் இருந்து இடையகோட்டைக்கு மாலை நேர பேருந்துகள் இல்லாததால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள இடையகோட்டை பகுதியில் சுமார் 30 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்கள் விவசாயத்தை முக்கிய தொழிலாக கொண்டிருந்தாலும வியாபாரம், தொழிற்சாலை போன்ற பணிகளில் ஈடுபட்டுவரும் நடுத்தர வர்க்க மக்களும் அதிகம் பேர் வசித்து வருகின்றனர். மேலும் இடையகோட்டையை பூர்வீகமாக கொண்ட 1 லட்சத்துக்கும் அதிகமானோர் தமிழகத்தின் சென்னை மற்றும் பல்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர். அனைவருக்கும் தொழில், வியாபாரம், மருத்துவம் உள்ளிட்ட முக்கிய தேவைகளுக்கும், போக்குவரத்து மையமாகவும் திகழ்வது மாவட்ட தலைநகரான திண்டுக்கல் ஆகும்.
திண்டுக்கலுக்கு இப்பகுதியில் இருந்து சென்று வர போதிய பேருந்து வசதியில்லை. இதனால் மாலை 5 மணிக்கு பிறகு திண்டுக்கல்லில் இருந்து இவ்வூருக்கு பேருந்து வசதி இல்லமால் இப்பகுதி மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதனால் பல்வேறு பணிகளுக்கு தினமும் திண்டுக்கல் செல்வோரும், தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட பிற நகரங்களில் இருந்தும், வடமாநிலங்களில் இருந்தும் ரயில் மூலம் சொந்த ஊர் திரும்பும் மக்கள் பேருந்து வசதியில்லாதால் தங்களது உடைமைகளுடன் ஒட்டன்சத்திரம் வந்து அதன்பின் இடையகோட்டை வர வேண்டியுள்ளது.
The post திண்டுக்கல்லில் இருந்து இடையகோட்டைக்கு மாலை நேர பஸ் இல்லாததால் மக்கள் சிரமம்: கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா? appeared first on Dinakaran.