திண்டுக்கல், மே 26: திண்டுக்கல் வந்த ரயிலில் கேட்பாரற்று கிடந்த பையில் இருந்த 18.400 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்து கடத்தி வந்தது யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேற்குவங்க மாநிலம் புருலியாவில் இருந்து திருநெல்வேலி வரை செல்லும் புருலியா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று அதிகாலை ரயில் நிலையத்திற்கு வந்தது. அப்போது திண்டுக்கல் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் தூயமணி வெள்ளைச்சாமி தலைமையில் சிறப்பு எஸ்ஐ மணிகண்டன், ஏட்டு மதுரை வீரன், வெங்கடேஸ்வரன், விவேக், பாண்டியராஜன் தனிப்பிரிவு போலீஸ் மணிவண்ணன் ஆகியோர் அந்த ரயிலில் ஏறி முன்பதிவு இல்லாத பெட்டியில் திடீரென சோதனை மேற்கொண்டனர். அப்போது கேட்பாரற்று கிடந்த 3 பைகளை சோதனை செய்தனர். அப்போது அந்த பைகளில் 18.400 கிலோ கஞ்சா இருந்தது.
இதையடுத்து போலீசார் அதனை பறிமுதல் செய்து திண்டுக்கல் போதை பொருள் நுண்ணறிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் அதனை கடத்தி வந்தது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post திண்டுக்கல் வந்த ரயிலில் 18 கிலோ கஞ்சா பறிமுதல் கடத்தி வந்தது யாரென விசாரணை appeared first on Dinakaran.