திண்டுக்கல், பிப்.17: திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் விரிவாக்க பணி நடைபெற்று வருவதாக தென்னக ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்தார். திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனில் தென்னக ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் நேற்று முன் தினம் இரவு, திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் ரயில்வே ஸ்டேஷனில் உள்ள நடைமேடை, லிப்ட் வசதி மற்றும் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடங்கள் குறித்து ஆய்வு செய்தார்.
இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனில் ரூ.30 கோடியில் விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இதில் பயணிகள் தங்கக்கூடிய குளிர்சாதன வசதி கொண்ட ஓய்வறைகள், உணவு அருந்தும் கூடம், புதிதாக பார்க்கிங் ஏரியா ஆகிய பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் கட்டிடங்கள், நகரும் படிக்கட்டுகள், லிப்ட் ஆகியவை புதிதாக அமைக்கப்பட உள்ளது. ரயில்வே ஸ்டேஷனுக்கு பயணிகள் வருகை அதிகமாக இருப்பதால் இதுபோன்ற வசதி செய்யப்படுகிறது’ என்றார்.
The post திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனில் ரூ.30 கோடியில் விரிவாக்க பணி: பொதுமேலாளர் தகவல் appeared first on Dinakaran.