திண்டுக்கல் மாவட்டத்தில் புதிய சிற்றுந்து வாகன அனுமதி சீட்டு வழங்க முடிவு

3 months ago 12

திண்டுக்கல், பிப். 7: திண்டுக்கல் மாவட்டத்தில் புதிய சிற்றுந்து வாகன அனுமதி சீட்டு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் சிற்றுந்து உள்ளிட்ட நிலை பேருந்துகளை ஒழுங்குப்படுத்தவும், புதிய சிற்றுந்து வாகன அனுமதி சீட்டுகள் வழங்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. சிற்றுந்துகளுக்கான புதிய வழித்தடங்கள் கலெக்டர் மற்றும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தெரிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நகர்புற மற்றும் கிராமப்புற பஸ் சேவைகளை மேம்படுத்தவும், 100 மற்றும் அதற்கு மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும், கிராமங்கள் மற்றும் வசிப்பிடங்களுக்கு கடைசி எல்லை இணைப்பை உறுதி செய்வதும் இத்திட்டத்தின் நோக்கமாகும். வழித்தடங்கள் மாவட்ட போக்குவரத்து அதிகாரியினால் அடையாளம் காணப்படும். வழித்தடத்தின் நீளம், அதிகபட்சம் 25 கி.மீ. வரை இருக்க வேண்டும்.

வழித்தடத்தின் மொத்த நீளத்தில் 65 சதவீதம் நீளம் பஸ் போக்குவரத்து இல்லாத வழித்தடமாக இருக்க வேண்டும். நிலை பேருந்து மற்றும் சிற்றுந்து சேவைகள் இல்லாத வழித்தடங்கள் மற்றும் மேற்படி சேவைகள் இருந்தும் அவை ஒரு நாளில் 4 நடைகளுக்கும் குறைவாக இயக்கப்படுமாயின், அவை பேருந்து சேவைகள் இல்லா வழித்தடமாக கருதப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post திண்டுக்கல் மாவட்டத்தில் புதிய சிற்றுந்து வாகன அனுமதி சீட்டு வழங்க முடிவு appeared first on Dinakaran.

Read Entire Article