
திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி பகுதியில் கடந்த 2023-ம் ஆண்டு சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்த, பஞ்சம்பட்டி பகுதியைச் சேர்ந்த கேத்தேஸ்ராஜா (வயது 19) என்பவரை சின்னாளப்பட்டி காவல் நிலைய போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. பிரதீப் அறிவுறுத்தலின்படி, அம்பாத்துரை சரக காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வசந்தகுமார், நீதிமன்ற ஏட்டு பசுபதி மற்றும் அரசு வழக்கறிஞர் மைதிலி ஆகியோரின் முயற்சியால் நேற்று (22.04.2025) திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி, குற்றவாளி கேத்தேஸ்ராஜாவுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும் இந்த ஆண்டு இதுவரை 18 போக்சோ வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.