கோபால்பட்டி, பிப். 14: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அம்மைக்கட்டு எனப்படும் மம்ப்ஸ் நோய் பரவி வருகிறது. பாராமிக்சோ எனும் வைரசால் ஏற்படும் இந்நோயின் பரவல் திண்டுக்கல் மாவட்டத்தின் பல பகுதிகளில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக குழந்தைகளை குறி ைவத்து இந்நோய் பரவி வருகிறது. இந்நிலையில் திண்டுக்கல் அருகேயுள்ள பில்லநாயக்கன்பட்டி கிராமத்தில் சிலருக்கு மம்ப்ஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் மாவட்ட சுகாதார அலுவலர் செல்வகுமார், வட்டார மருத்துவ அலுவலர் சீனிவாசன் தலைமையிலான மருத்துவ குழுவினர் அப்பகுதிக்கு சென்று வீடு வீடாக ஆய்வு செய்து மம்ப்ஸ் நோய் பாதிப்பு குறித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் நோய் பாதிப்பு ஏற்பட்ட நபர்களை தனிமைப்படுத்தினாலே ஒரு சில நாட்களில் இது சரியாகி விடும் எனவும், பொதுமக்கள் யாரும் அச்ச கொள்ள வேண்டாம் எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் அங்குள்ள பள்ளிக்கு சென்று மாணவ, மாணவிகளிடம் நோய் பாதிப்பு மற்றும் பாதுகாப்பு முறைகள் குறித்து விளக்கம் அளித்தனர்.
The post திண்டுக்கல் அருகே மம்ப்ஸ் பாதித்த ஊரில் மருத்துவ குழுவினர் ஆய்வு appeared first on Dinakaran.