திண்டுக்கல் அருகே கட்டிலின் கால்கள் கழன்று கழுத்தில் விழுந்து தந்தை, மகன் உயிரிழப்பு.!

2 months ago 13
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சாணார்பட்டியில் இரும்புக் கட்டிலின் கால்கள் கழன்று விழுந்து கழுத்தை நசுக்கியதில் தந்தை மகன் உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. கோபிக் கிருஷ்ணன் என்பவரும் அவரது 9 வயதான மூத்த மகன் கார்த்திக் ரோஷனும் வீட்டின் மாடியிலுள்ள இரும்புக் கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த போது விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இரும்பு கட்டில் கால்களில் உள்ள  நான்கு போல்ட்டுகளும் இல்லாததால் இரும்பு கட்டில் கால் முறிந்து  விழுந்ததில் இருவரின் கழுத்துப்பகுதி நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்ததாக கூறப்படுகிறது. 
Read Entire Article