திடீரென முடங்கிய ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் - பயணிகள் அவதி

6 months ago 18

சென்னை,

நாடு முழுவதும் ரெயில் டிக்கெட் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மற்றும் அதற்கான பிரத்யேக செல்போன் செயலி வாயிலாக முன்பதிவு செய்யப்படுகிறது. டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட காரணங்களுக்காக நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் இந்த இணையதளத்தை பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்தநிலையில், இன்று காலை 10.15 மணி அளவில் திடீரென ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் திடீரென முடங்கியது. இதனால், பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமலும், ரத்து செய்ய முடியாமலும் அவதி அடைந்தனர். குறிப்பாக, தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்வோர் கடும் அவதிப்பட்டனர். இணையதளத்தில் ஏற்பட்ட கோளாறை சரி செய்யும் பணியில் தொழில் நுட்ப வல்லுனர்கள் ஈடுபட்டனர்.

மதியம் 12 மணிக்கு பிறகு டிக்கெட் முன்பதிவு முழுமையாக சீரானது. இதுபோன்று ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவதாக பயணிகள் புகார் அளித்துள்ளனர். 

Read Entire Article