திடீரென மயங்கி மாணவன் உயிரிழப்பு

1 month ago 6

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே பள்ளியில் இருந்து திரும்பியபோது திடீரென மயங்கி விழுந்து 11ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் பஜாரில் தனியார் பள்ளி உள்ளது. 12ம் வகுப்பு வரை உள்ள இந்தப் பள்ளியில் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் ஆந்திர மாநிலம் காரூர் பகுதியைச் சேர்ந்த நந்தா (16) என்ற மாணவன் இப்பள்ளியில் 11ம் வகுப்பு வணிகவியல் பாடப்பிரிவில் படித்து வந்தார்.

நேற்று வழக்கம்போல் பள்ளியை முடித்துவிட்டு பள்ளியில் இருந்து 100 மீட்டர் தொலைவில் மாணவன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென மயக்கம் ஏற்பட்டு நந்தா கீழே விழுந்துள்ளார். இதை அறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு எளாவூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு நந்தாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

இதை அறிந்த சிப்காட் போலீசார் உடலை கைப்பற்றி பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உடல் நலக்குறைவு காரணமாக மாணவர் உயிரிழந்துள்ளாரா, அல்லது தனியார் பள்ளியில் ஏதாவது நடந்துள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. பள்ளியில் இருந்து திரும்பியபோது மாணவன் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தார் மற்றும் பள்ளி மாணவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post திடீரென மயங்கி மாணவன் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Read Entire Article