
சென்னை,
சென்னை பட்டினப்பாக்கம் அருகே பைக்கில் ஒருவர் சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் இருந்து புகை வெளியேறியது. இதனைக்கண்ட நபர் அவசர அவசரமாக பைக்கை சாலையில் நிறுத்திவிட்டு தப்பினார். இதனையடுத்து பைக் மளமளவென தீப்பற்றி எரிந்தது.
இது குறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்து அந்த வாகனத்தை அப்புறப்படுத்தினர்.
இந்த சம்பவத்தால் பட்டினப்பாக்கம் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.