திங்கள்சந்தை, டிச.10: தக்கலை அருகே சரல்விளை காட்டுபுத்தன்வீடு பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ண பிள்ளை (83). தற்போது திங்கள்சந்தையை அடுத்த அழகன்பாறை குன்னங்காடு பகுதியில் மகள் வீட்டில் வசித்து வந்தார். சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தார். அவ்வப்போது வீட்டை விட்டு வெளியே செல்வதும் சில நாட்கள் கழித்து வீடு திரும்புவதும் வழக்கம். இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை ராமகிருஷ்ண பிள்ளை அவரது மகள் விஜயலெட்சுமிக்கு சொந்தமான தோட்டத்தில் மரத்தில் கயிற்றில் தூக்குமாட்டி தொங்கிய நிலையில் கிடந்துள்ளார். அவரது உடல் அழுகிய நிலையில் இருந்தது. இந்த தகவல் அறிந்து சென்ற போலீசார் உடலை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவரது பேரன் ராமகிருஷ்ணன் (34) இரணியல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post திங்கள்சந்தை அருகே முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை appeared first on Dinakaran.