திக்வேஷ் ரதியின் விக்கெட் கொண்டாட்டத்தின் பின்னணி என்ன..? ரிஷப் பண்ட் விளக்கம்

5 days ago 5

லக்னோ,

18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் கடந்த 4-ம் தேதி லக்னோவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் லக்னோ 12 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் மும்பை வீரர் நமன் திர்ரை அவுட் செய்த பின் அதை வித்தியாசமான முறையில் (நோட் புக் செலிபிரேஷன்) கொண்டாடிய லக்னோ பந்துவீச்சாளர் திக்வேஷ் ரதிக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு 2 தகுதி இழப்பு புள்ளிகளும் வழங்கப்பட்டுள்ளது.

பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் ப்ரியான்ஷ் ஆர்யா விக்கெட்டை வீழ்த்திய பின்பும் திக்வேஷ் ரதி வித்தியாசமான முறையில் (நோட் புக் செலிபிரேஷன்) கொண்டாடினார். அப்போது அவருக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 25 சதவீதம் அபராதமும், ஒரு தகுதி இழப்பு புள்ளியும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே மும்பைக்கு எதிரான போட்டியில் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்ட திக்வேஷ் ரதி அந்த விருது வழங்கும் நிகழ்வில், சுனில் நரைன் தமது ரோல் மாடல் என்றும் அவரைப் பார்த்து பவுலிங் செய்வதாகவும் கூறினார்.

இந்நிலையில் லக்னோ அணி தனது அடுத்த ஆட்டத்தில் கொல்கத்தாவுக்கு எதிராக விளையாட உள்ளது. இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் தற்போது கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பயிற்சியின்போது தன்னுடைய ரோல் மாடலானா சுனில் நரைனை திக்வேஷ் ரதி நேரில் சந்தித்து பேசினார். அவர்களுடன் நிக்கோலஸ் பூரன், ரிஷப் பண்ட் உடனிருந்தனர்.

அந்த சமயத்தில் திக்வேஷ் ரதியிடம் நிக்கோலஸ் பூரன், "சரி சொல்லுங்கள். நரைன் இப்படியெல்லாம் கொண்டாட மாட்டார். நீங்கள் ஏன் கொண்டாடுகிறீர்கள்?" என்று கேட்டார்.

அதற்கு திக்வேஷ் ரதி, "நான் டெல்லியை சேர்ந்தவன்" என்று பதிலளித்தார். இதனை கேட்டு அனைவரும் சிரித்தனர்.

பின்னர் ரிஷப் பண்ட், "திக்வேஷ் டிக்கெட் கலெக்டர். நரைன் விக்கெட் கலெக்டர். அதனாலேயே விக்கெட் எடுக்கும் போதெல்லாம் அதை திக்வேஷ் எழுதி கொண்டாடுகிறார்" என்று விளக்கினார்.

POV: Finally you met your idol pic.twitter.com/ynKB3VuVgi

— KolkataKnightRiders (@KKRiders) April 6, 2025
Read Entire Article