'தி ஸ்மைல் மேன்' படத்தின் டிரெய்லரை வெளியிடும் விண்டேஜ் கதாநாயகிகள்

5 hours ago 2

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் சரத்குமார். கடந்த ஆண்டு இவரது நடிப்பில் வெளியான 'பொன்னியின் செல்வன், போர் தொழில், பரம் பொருள்' ஆகிய திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தன. இவர் கடந்த மாதம் வெளியான 'ஹிட் லிஸ்ட்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அடுத்தடுத்து போலீஸ் கதாபாத்திரத்தில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

இவரது 150-வது படத்தை இயக்குனர் ஷ்யாம் பர்வின் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு 'தி ஸ்மைல் மேன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் சரத்குமாருடன் சிஜா ரோஸ், இனியா, ஜார்ஜ் மர்யான் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

சரத்குமார் இப்படத்தில் அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்ட ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார், அவரது ஞாபகம் அழிவதற்குள் அவர் ஒரு தொடர் கொலைகள் செய்த குற்றவாளியை பிடிக்க வேண்டும். இதை மையமாக வைத்து படத்தின் கதைக்களம் உருவாகியுள்ளது. சமீபத்தில் 'தி ஸ்மைல் மேன்' படத்தின் டீசர் வெளியாகி வைரலானது.

இப்படம் வருகிற 27ம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் டிரெய்லர் இன்று மாலை 5 மணியளவில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் டிரெய்லரை விண்டேஜ் கதாநாயகிகளான ராதிகா சரத்குமார், ரம்யா கிருஷ்ணன், குஷ்பு சுந்தர், மீனா மற்றும் நமிதா ஆகியோர் இப்படத்தின் டிரெய்லரை வெளியிட உள்ளனர். 

An interesting trailer of #TheSmileMan will be unveiled by the evergreen Heroines of K-Town today at 5PM !!TN theatrical release through #GRRMovies @grrragu #Sarathkumar150 @realsarathkumar @iamineya #Sijarose @magnum_movies @kafilmcompany @SyamPraveen2 @VikramMohan_DOPpic.twitter.com/Clh7ERAhuj

— R Sarath Kumar (@realsarathkumar) December 23, 2024
Read Entire Article