
சென்னை,
மலையாள திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை மாளவிகா மோகனன், தமிழில் 'பேட்ட', 'மாஸ்டர்' போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர். அதன் பிறகு நடிகர் தனுஷ் நடித்த 'மாறன்' படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் படத்தில் நடித்திருந்தார்.
தற்போது, தெலுங்கில் பிரபாசுடன் 'தி ராஜா சாப்' படத்தில் நடித்து வருகிறார். இது மாளவிகா மோகனன் தெலுங்கில் நடிக்கும் முதல் படமாகும். இந்நிலையில், இப்படத்தில் நடிப்பதற்கான காரணம் என்ன என்று நடிகை மாளவிகா மோகனன் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் கூறுகையில்,
'பெரும்பாலான படங்களில், ஹீரோவின் கதாபாத்திரம் பெரிதாகவும், பெண்ணின் கதாபாத்திரம் சிறியதாகவும் காண்பிக்கப்படுகிறது. ஆனால், 'தி ராஜா சாப்' படத்தில் அப்படி இல்லை. எனது கதாபாத்திரம் மிகவும் பிடித்திருந்தது. இது போன்ற பிரமாண்டமான படத்தில் அப்படி ஒரு கதாபாத்திரம் கிடைப்பது மிகவும் அரிது. அதுமட்டுமில்லாமல் பாகுபலியின் ரசிகை நான். பிரபாசுடன் பணியாற்ற வேண்டும் என்பது எனது கனவு. இதெல்லாம்தான் நான் இப்படத்தில் நடிக்க காரணம்' என்றார்.