
சென்னை,
தி.மு.க. தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
கடலூர் மாவட்டத்துக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள சென்ற முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நெய்வேலி நகரம் சி.பி.எஸ். அண்ணா திடலில் கடலூர் மேற்கு மாவட்டம், நெய்வேலி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சபா.ராஜேந்திரன் ஏற்பாட்டில் பா.ம.க., அ.தி.மு.க., பா.ஜனதா, த.வெ.க., தே.மு.தி.க., அ.ம.மு.க., நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் தி.மு.க. இணைந்தனர்.
அப்போது அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், எஸ்.எஸ்.சிவசங்கர், சி.வி.கணேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.