
சென்னை,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72-வது பிறந்தநாளையொட்டி சென்னை ஈஞ்சம்பாக்கம் கடற்கரையில் மாபெரும் படகுப் போட்டி நடைபெற்றது. உத்தண்டி முதல் ஊரூர் வரை 13 மீனவ கிராமங்கள் பங்குபெறும் படகு போட்டியை துணை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்.
தி.மு.க. சார்பில் நடைபெற்ற இந்த படகுப்போட்டியில் படகுகள் சீறிப்பாய்ந்தன. இதனிடையே, போட்டியாளர்களுடன் தனி படகில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் படகில் பயணம் செய்தனர்.